செய்திகள்
சாலாவவில் மக்களுக்கும் இராணுவத்திற்குமிடையே மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சி : பிரதமர்
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவத்திற்கும் மக்களுக்குமிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் சாலாவ சம்பவம் தொடர்பாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிலர் இராணுவத்திற்கும் மக்களுக்குமிடையே மோதலொன்றை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எவ்வாறாயினும் இராணுவத்திற்கு எதிராக மக்கள் கருத்து வெளியிடுவது தவறாகும். இந்நிலையில் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களக்கும் வீடுகளை அமைத்துக்கொடுக்கும் வரை அவர்கள் வாடகை வீடுகளில் இருக்கும் வகையில் அவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.என தெரிவித்துள்ளார்.
R-06




