யாழ்ப்பாணத்தில் சித்திரவதை செய்யப்படும் பிரிட்டிஸ் பிரஜை
இலங்கை தமிழரும் பிரிட்டிஸ் பிரஜையுமான வேலாயுதபிள்ளை ரேணுகரூபன் என்பவர் இம்மாத ஆரம்பத்தில் பிரிட்டனில் இருந்து தனது சொந்த ஊரிற்கு சென்ற வேளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளாதாகவும் கடும் சித்திரவதைகள் காயங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரேணுகரூபனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நிரந்தரமாக தடுத்துவைப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக குடும்பத்தினரிற்கு தகவல்கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதே அழுத்தங்களும் ஊடகங்கள் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவதுமுமே ரூபனை காப்பாற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
1981 ம்ஆண்டு பிறந்தரேணுகரூபன் முன்னர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புவைத்திருந்தால் தான் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறி பிரிட்டனின் அரசியல் தஞ்சம் கோரியவர். அதன் பின்னர் அவர் பிரிட்டனின் பிரஜையானார். 17 வருடங்களாக பிரிட்டனிலேயே வாழ்ந்து வந்த அவரது உடலில் புலிசின்னம் ஓன்றை பொறித்துள்ளார்.
அவரது சகோதரி வேலாயுதபிள்ளை லலிதாரூபி முன்னர் புலிகளின் குரல் வானொலியின்செய்தி வாசித்தவர். 2006 மற்றும் 2010 இலங்கை படையினரால் சித்திரவதைசெய்யப்பட்ட பின்னர் அவர் பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.

மே 31 ம் திகதி வேலாயுதபிள்ளை ரேணுகரூபன் தனது வயதான பெற்றோரை பார்ப்பதற்காகவும், திருமணம் செய்வதற்காகவும் இலங்கைக்கு சென்றுள்ளார். அவர் யூன் மாதம் முதலாம் திகதி மதியம் 12.45 ற்கு கொழும்பு விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். கொழும்பு விமானநிலையத்தில் அவர் குறித்த விபரங்களை பெற்றுக்கொண்ட பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை சாவகச்சேரி வரணியில் உள்ள குடமியன் என்ற இடத்திற்கு செல்வதற்கு அனுமதித்துள்ளனர்.
ரேணுகரூபன் தனது வீடுவந்து சேர்ந்த அன்றைய தினமே சீருடை அணியாத இரு அதிகாரிகள் அதிகாலையில் மோட்டார் சைக்களில்அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ரேணுகரூபன் பிரிட்டனில் வாழ்ந்த வேளையில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளிற்கு உதவி புரிந்தார் என குற்றம்சாட்டிய அவர்கள் அவரை கைதுசெய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.
வர் அதற்கு மறுத்தவேளை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அவரை தாக்கியுள்ளனர். அவரது குடும்பத்தினர் ரூபனை கைதுசெய்வதற்கான பிடியாணை ஏதாவது உள்ளதா என கேட்ட வேளை அவர்கள் அவ்வாறான ஆவணங்கள் எதனையும் காண்பிக்கவில்லை.
இதன் பின்னர் ரூபனின் வீட்டிற்கு கொடிகாமம் பொலிஸ் நிலையத்திலிருந்து வாகனமொன்று வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய பொலிஸார் ரூபனின் கைகளை கட்டி இழுத்துச்சென்றுள்ளனர். அவர் கைதுசெய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் எதனையும் அவர்கள் வழங்கவில்லை. குடும்பத்தவர்களுடன் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்காமல் அவரை தடுத்துவைத்திருக்கின்றனர்.
பிரிட்டிஸ் தூதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி வாக்குமூலம் பெறுவதற்கான முயற்சி
இதன் பின்னர் 3 ம் திகதி ரேணுகரூபனின் வீட்டிற்கு சென்ற சீருடைஅணியாத இரு அதிகாரிகள் தங்களை பிரிட்டிஸ் தூதரகத்தினை சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஓருவர் தன்னை நியுயான் எனவும் மற்றைய நபர் தன்னை நிசான் எனவும் அறிமுகப்படுத்தியுள்ளனர். தனிப்பட்ட தகவல்களை குறித்துக்கொண்ட பின்னர் அவர்கள்ரேணுகரூபனிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான தனிப்பட்ட தொடர்புகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.குடும்பத்தினர் அது குறித்து பதில் அளிக்கதயங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் லண்டனில் உள்ள ரூபனின் சகோதரிக்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கேள்விஎழுப்பியுள்ளனர்.
அவர்கள் பிரிட்டிஸ் தூதரக அதிகாரிகள் இல்லை என்பதை ஓரு கட்டத்தில் உணர்ந்துகொண்ட ரேணுகரூபனின் குடும்பத்தவர்கள் அவர்களின் கேள்விகளிற்கு பதில் அளிக்க மறுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
சர்வதே தலையீடு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்தல்
அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் ரேணுகரூபனின் குடும்பத்தவர்கள் என்னையும் இலங்கையில் உள்ள எனது சகாவையும் உடனடியாக தொடர்புகொண்டுள்ளனர். நான் இதனை உடனடியாக பிரிட்டிஸ் தூதரகம், இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திறகுகொண்டுவந்தேன். எனது ஆலோசனையின் கீழ் இந்த விடயத்தை ஐசிபிபிஜி அமைப்பின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்பி. ன்னர் பிரான்சிஸ் ஹரிசன் இதனை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குகொண்டுவந்தார் மேலும் பிரிட்டனின் வெளிவிவகாரஅமைச்சு மற்றும் மன்னிப்புச்சபைக்கும் இந்த விடயம் கொண்டுசெல்லப்பட்டது.
சர்வதே அழுத்தங்கள் காரணமாக இலங்கை அதிகாரிகள் பொலிஸார் ரேணுகரூபனை கைதுசெய்துள்ளதை ஏற்றுக்கொண்டனர். அவரை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவர் போலியான குற்றச்சாட்டுகளுடன் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார்.
பொலிஸார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் தலைமறைவாகியுள்ளார். ரேணுகரூபனின் பெயரை அவர்கள் வேண்டுமென்று இதில் சேர்த்துள்ளனர் இதனை தொடர்ந்து அவர் 17 ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க என்பவர் லண்டனிலுள்ள எனது கட்சிக்காரர் லலிதாரூபியுடன் தொடர்புகொண்டு இந்த விடயத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்தவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டவேளை சித்திரவதையும் துஸ்பிரயோகமும்
ரேணுகரூபன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் கடும் சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்,அதனால் அவர் கடும்காயங்களிற்கு உள்ளாகியுள்ளார். பாதிக்கப்பட்டவரிடமிருந்து கிடைத்த தகவலின் படி அவருக்கு விடுதலைப்புலிகளுடன் உள்ள தொடர்புகள் காரணமாகவே அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் கைதுசெய்யப்பட்டது குறித்து சர்வதேச அமைப்புகளிடம் தகவல் வழங்கியதற்காகவும் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக அவரிற்கு முகத்திலும் கைகாலிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடும் சித்திரவதைகள் காரணமாக அவர் 7 ம்திகதி யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பிலுள்ள எனது சகாக்களின் உதவியுடன் ரேணுகரூபனின் குடும்பத்தவர்கள் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்துள்ளனர். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களும் பாதிக்கப்பட்டவரை சென்று பார்த்துள்ளனர். எனினும் சிறைச்சாலை பாதுகாவலர்கள் உள்மோதல் ஓன்றிலேயே அவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் இது முற்றிலும் பொய்யான தகவல். பாதிக்கப்பட்டவரை மனித உரிமை ஆணைக்குழுவினர் பார்வையிட்டவேளை சட்டத்தரணிகள் அவரின் காயங்களை புகைப்படமெடுத்துள்ளனர்.
இதுபோன்ற மற்றுமொரு சம்பவம்
மே2 ம்திகதி ஐசிபிபிஜி மற்றும் தமிழ் தகவல் மையத்தின் சார்பில் இலங்கையில ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சென்றிருந்த சுயாதீன ஆய்வாளர் புஸ்பதரன் புத்திரசிகாமணியும் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். அவரிடம் ஐசிபிபிஜி அமைப்பின் பணிகள் குறித்து கேள்வி எழுப்பிய இலங்கை அதிகாரிகள். எங்களது தொண்டர்களின் விபரங்களையும் இலங்கையில் அவர் சேகரித்த தகவல்களையும் வழங்குமாறு கோரியுள்ளனர். பொலிஸாரிற்கு இந்த சம்பவம் குறித்து தெரிவித்த போதிலும் அவர்கள் இது குறித்து நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை இந்த சம்பவம் பொலிஸாரின் உதவியுடனேயே இடம்பெற்றிருக்கவேண்டும்.





