செய்திகள்

ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றம்

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீதிக் கட்டமைப்பை சிறந்த செய்றபாடுடையதாக மாற்ற வேண்டும். எவ்வாறாயினும் நீதி கட்டமைப்பில் குறைப்பாடுகள் உள்ளன அவற்றை சரி செய்து சரியான முறையில் அதனை கொண்டு செல்ல வேண்டுமேனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.