செய்திகள்

2015ம் ஆண்டிற்கான நிதிச்செயற்பாட்டு அறிக்கை-முதலமைச்சர் விளக்கம்

2015ம் ஆண்டிற்கான நிதிச்செயற்பாட்டு அறிக்கை–வடமாகாண சபை

மேற்படி விடயம் தொடர்பாக 2015ம் ஆண்டின் வடமாகாணசபைக்கான நிதிச்செலவீனங்கள் தொடர்பான முன்னுக்குபின் முரணான செய்திகள் பொதுமக்களிடையே வேண்டுமென்றோ அல்லது புரியாமலோ பரவவிடப்பட்டுள்ளது. அதாவது வடமாகாணசபைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருந்தொகையானபணம் செலவழிக்கப்படாது மீள அனுப்பப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைநிலையை பொதுமக்களுக்கு அறியத்தரவேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் தலையாயகடமை என்பதால் பிரதிப் பிரதமசெயலாளர் (நிதி) அவர்களால் வெளியிடப்பட்ட 2015ம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை இத்துடன் பொதுமக்கள் பார்வைக்காக வெளிப்படுத்தப்படுகின்றன.

வருமானம் – மத்தியஅரசிடமிருந்து

வருமானவிபரம்                                                     மதிப்பீடு                             உண்மைஅறவீடு                  வீதம்
முத்திரைக் கட்டணம்                                            450 மில்                              473.97 மில்                            105மூ
தேசத்தைக் கட்டிஎழுப்பும் வரி                            1475 மில்                           1049.32 மில்                              71மூ
வாகனபதிவுக் கட்டணம்                                         50 மில்                              69.20மில்                             138மூ

மாகாணசபைக்குக் கிடைத்தவருமானம்
அரசகட்டிடங்களுக்கானவாடகை                      11.2 மில்                               12.2 மில்                              109மூ
கடன்களுக்கானவட்டி                                           27 மில்                                 28.8 மில்                             107மூ
அரசகாணிச்சட்டத்தின் கீழானகட்டணம்           15 மில்                                 14.7 மில்                               98மூ
திணைக்களவிற்பனை                                           60 மில்                                 61 மில்                                102மூ
மோட்டார் வாகனஅனுமதிக் கட்டணம்           245 மில்                               282.6 மில்                             115மூ
பரீட்சைக் கட்டணம்                                                 2.2 மில்                              13.4 மில்                            609மூ
மூலதனச் சொத்துக்களின் விற்பனை                    1 மில்                                    0.52 மில்                           52மூ
நீதிமன்றஆவணங்களின் மீதான
முத்திரைக் கட்டணம்                                                5 மில்                                   6.6 மில்                            132மூ
நானாவீதவருமானம்                                              35 மில்                                 57.2 மில்                            163மூ

உள்ளூராட்சிசபைகளுக்குரியவருமானம்
நீதிமன்றதண்டப்பணம்                                           0.3 மில்                              24.3 மில் –
(அடையாளஏற்பாடு)
அசையாசொத்துக்களின் கைமாற்றலின்
போதானமுத்திரைத் தீர்வை                                  0.3 மில்                             192.88 மில் –
(அடையாளஏற்பாடு)
செலவீடு

நிதிமூலங்கள் ஒதுக்கீடு உண்மையானசெலவு வீதம்
1. தொகுதிக் கொடை                                     18590.93 மில்                      18372.94 மில்                            99மூ
2.மாகாணகுறித்தொதுக்கப்பட்ட
அபிவிருத்திக் கொடை                                     1440 மில்                              1418.59 மில்                            99மூ
3. பிரமாணஅடிப்டையிலான
கொடை                                                                400 மில்                               379.23 மில்                             95மூ
4. பாடசாலைக் கல்வியைஒரு
அறிவுமையத்தின் அடிப்டையாக
மாற்றும் செயற்திட்டம்                                       387.66 மில்                          335.61 மில்                             87மூ
5. சுகாதாரதுறைஅபிவிருத்தி
கருத்திட்டம்                                                          355 மில்                                355 மில்                               100மூ
6. கட்டிடநிர்மாணம்                                            150 மில்                                150 மில்                               100மூ

மொத்தம்                                                           21323.59 மில்                      21011.37 மில்                            99மூ

7. யுனிசெப்                                                            26.03 மில்                             15.75 மில்

முழு மொத்தம்                                                 21349.62 மில்                       21027.12 மில்

குறிப்பு :-

யுனிசெப் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரையானதாகும். அதனால் 2015ம் ஆண்டின் மிகுதி அடுத்த ஆண்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு செலவீனங்கள் செய்யப்படும்.

யுனிசெப் நிதிஒதுக்கீட்டின் கீழ் நிறைவேற்றப்படும் வேலைத் திட்டங்கள் 180 நாட்கள் வேலைத்திட்டம் என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இவ் வேலைத்திட்டங்களுக்கான நிதி 180 நாட்களுக்குள் அதாவது 6 மாதகாலங்களுக்குள் பயன்படுத்தப்படமுடியும். இவ் வேலைத் திட்டங்கள் நிதிஆண்டுகளின் செயற்பாட்டிற்குள் அடங்காது. வருட இறுதியில் ஒதுக்கப்படுகின்றநிதிகள் அடுத்த ஆண்டிலும் செலவுசெய்யப்படலாம்.

எனவே 2015ம் ஆண்டுநிதிச் செயற்பாட்டில் எந்தவொருநிதியும் மீளதிறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என்பதை வடமாகாணசபையின் சார்பில் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றேன். என அவரது அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

N5