செய்திகள்
கண்ணி வெடி அகற்றும் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் டாஸ் நிறுவனத்தின் பணிகளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டு கண்ணி வெடி அகற்றும் பணிகள் தொடர்பான கலந்துரையாடியுள்ளனர்.
கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஆற்றிவரும் டாஸ் நிறுவனம் தற்போது கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை தெற்கு, வேம்பொடுகெணி ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிஅகற்றும் பணிகளை ஆற்றி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதியுதவியுடன் இக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க நிதியுதவியுடன் கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள அதிகள் சென்று பார்வையிட்டுள்ளதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதில் இலங்கைக்கு வருகைதந்தை அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின்; அதிகாரிகளான ஜோன் மைக்கடம்ஸ் ஜெக்கப் இன்கிலீஸ் ஆகியோரும் இலங்கைக்கான இராஜாங்க திணைக்கள அதிகாரிகளான மெலிசா வின்டேக்கர் மற்றும் றெஜி கொக்ஸ்; ஆகியோரும் இதில் கலந்;து கொண்டிருந்தனர்.
முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் டாஸ்நிறுவனம் இப்பகுதியில் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் இவற்றைத்தீர்ப்பதற்கான விடங்கள் மற்றும் பல்;வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் மிக வெடிபொருள் ஆபத்தான முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும்பணிகளையும் மேற்படி குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.
டாஸ் நிறுவனம் கடந்த 2009ம்ஆ ண்டு காலப்பகுதி முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் வெடிபொருள் ஆபத்தான அடையாளம்காணப்பட்ட கண்ணிவெடி அகற்றும்பணிகளை மேற்கொண்டுவருவதுடன் மாவட்ட த்தின் வருமானத்தை ஈட்டக்கூடிய ஆனையிறவுப்பகுதியிலும் வெடி பொருள் அகற்றும் பணிகளை மேற்கொண்டு குறித்த பகுதி கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது முகமாலைப்பகுதியின் மீள்குடியேற்றம் மக்களின் விவசாய நடவடிக்கைகள் போன்ற விடயங்களுக்கும் தென்னை பயிர்;செய்கையை மேற்கொள்வதற்கும் ஏற்றவகையிலும் இக்கண்ணிஅவடி அகற்றும்பணிகள் முன்னெ டுக்கப்டப்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

n10




