அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கிய எஸ்.ஜே.சூர்யா
சினி உலகத்தின் இந்த மாதம் Star Of The month யார்?. அது வேறு யாரும் இல்லை தன்னை இயக்குனராக நிரூபித்து பின் ஒரு நடிகனாக வெற்றிப்படங்களை கொடுத்தாலும், பல தரப்பு விமர்சனங்களை தாங்கிக்கொண்டு இத்தனை ஆண்டு தன்னை தானே செதுக்கி ஒரு அழகு சிலையாக உருமாறியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தான்.
அஜித்தின் வாலியில் இயக்குனராக அறிமுகமானவர் தான் எஸ்.ஜே.சூர்யா, முதல் படமே ஒரு சர்ச்சையான களம், படம் ரிலிஸாகி சில மோசமான கமெண்ட்டுகளால் தலையனையை பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார் எஸ்.ஜே. சூர்யா. ஒரு சில நாட்களில் லேட் பிக்கப் ஆகி படம் வசூல் சாதனை படைக்க ஆரம்பித்தது, இவை சாதரண வெற்றி இல்லை வாலியுடன் அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா படமும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித்திற்கு பல விருதுகள் பெற்று தந்த படம், அஜித் என்ற ஒரு நடிகனுக்குள் இருக்கும் உண்மையான நடிப்பை வெளியே கொண்டு வந்த படம், இதை தொடர்ந்து இன்னும் ஒரு ஹிட் கொடுக்கவில்லை என்றால் திரைப்பயணமே கேள்விகுறியாகிவிடும் என்ற நிலையில் இளைய தளபதி.
அந்த நேரத்தில் கைக்கொடுத்து டைட்டிலில் மட்டுமில்லை விஜய்யையும் குஷியாக்கினார் எஸ்.ஜே.சூர்யா. இன்று தமிழ் சினிமாவையே ஆளும் வசூல் மன்னர்கள் விஜய்-அஜித் இவர்களின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வந்தவர் எஸ்.ஜே.சூர்யா.
ஆனால், நான் நடிக்க தானே வந்தேன், எதற்காக இன்னும் தாமதம் என அஜித்-ஜோதிகாவை வைத்து நியூ படத்தை எடுக்க நினைத்த இவர், நானே ஹீரோவாகிறேன் என களத்தில் இறங்கி அதிலும் வெற்றி பெற்றார், பலரும் ஓவர் ஆக்டிங், லக்கில் ஓடுகிறது, ரகுமானின் இசை என என்ன சொன்னாலும் எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வெற்றி பெற்றார், இருந்தாலும் ஒரு முழு நடிகனாக யாரும் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
பின் நீண்ட இடைவேளைக்கு இசை என்ற படத்தை இயக்கினார், இந்த படத்தில் இரு இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார் , ஒரு இயக்குனர், இசையமைப்பாளர் என தன் திறமையை நிரூபித்த இவர் நடிகரான மட்டும் முழுமையடையாமல் இருந்தார். ஆனால், இதற்கும் ஒரு வழி பிறந்தது மார்டன் டே மணிரத்னம் கார்த்திக் சுப்புராஜ் மூலம்.
எஸ்.ஜே.சூர்யா என்ற அழகிய சிலையை அற்புதமாக இறைவியில் செதுக்கினார், எத்தனை விருதுகள் இதற்கு வரபோகிறது என்று தெரியாது, ஆனால், கண்டிப்பாக மக்களின் மனதில் இவருக்கு ஒரு நீங்காத விருது கிடைத்து விட்டது, அடுத்தடுத்து செல்வராகவன், முருகதாஸ் என பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா இன்று போல் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வரவேண்டும் என்று சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
N5




