செய்திகள்

துருக்கி விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 36பேர் பலி , 60 பேர் காயம் (வீடியோ)

துருக்கியின் இஸ்தான்புல்லின் அதாதுர்க் விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மூன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தம்மை வெடிக்க வைக்க முன்னர் ஏ.கே. 47 துப்பாக்கிகள் மூலம் விமான நிலையத்தின் சர்வதேச பகுதிக்கு வெளியே பாதுகாப்பு பிரிவினருடன் இரண்டு பயங்கரவாதிகளும் சண்டையில் ஈடுபட்டதாகவும் பின்னர் தம்மை இவர்கள் வெடிக்க வைத்ததாகவும் தெரியவருகிறது.

தமது கண்களுக்கு முன்னாள் தெரிந்தவர்களை சரமாரியாக மூன்று பயங்கரவாதிகளும் சுட்டதாகவும் இவர்கள் கறுப்பு உடை அணிந்திருந்ததாகவும் ஆனால் முகமூடி அணிந்திருக்கவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்ட தென் ஆபிரிக்க உல்லாச பயணி ஒருவர் தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=fJ3rRcD_gOA

இந்த தாக்குதலை ஐ. எஸ் பயங்கரவாதிகள் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சம்பவம் நடைபெற்ற இடம் எங்கும் இரத்தமும் சடலங்களும் நிறைந்து காணப்பட்டது.

இந்த தாக்குதலை குரூரமான தாக்குதல் என்று வர்ணித்துள்ள அமெரிக்கா துருக்கிக்கான தனது ஆதரவை வலியுருத்தியுள்ளது.

இந்த தாக்குதலை உலகம் எங்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு திருப்பு முனையாக கருத வேண்டும் என்று துருக்கி கூறியுள்ளது.

 

turkey airort attack 1