வற் வரி அதிகரிப்பு உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அரசாங்கத்திடம் கூறுங்கள் : கயந்த
வற் வரி அதிகரிப்பால் யாருக்கேனும்அநீதி இழைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அது தொடர்பாக அரசாங்கத்திற்கு அறிவிக்குமாறும் இணை அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வற் வரி குறித்து மிகவும் பொயான கருத்துக்கள் பரவிவருகின்றன. குறித்த வரி அதிகரிப்பால் சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன. அவை திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகளே ஒழிய அவற்றில் உண்மையில்லை. நாம் சாதாரண மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வரியை அதிகரிக்கவில்லை.
இதன்படி யாருக்கேனும் வற் வரி அதிகரிப்பால் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அது தொடர்பாக அரசாங்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் நாம் அது குறித்து நடவடிக்கையெடுப்போம். அத்துடன் தற்போது பிரதமரும் நிதி அமைச்சரும் வற் வரியில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடி வருகின்றனர்.
R-06




