செய்திகள்

பொருளாதார மத்திய நிலைய விவகாரம்; அவசர சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார் சம்பந்தன்

பொருளாதார மையத்தை வடக்கில் அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்துமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் முகமாக அவசரமாக கூட்டமைப்பின் கூட்டத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டுகிறார்.
வடக்கில் பொருளாதார மையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எல்லோரும் ஒருமித்த தீர்மானத்துடன் முடிவொன்றை எட்டுவதற்கு சம்பந்தன் இக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
கொழும்பில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
n10