செய்திகள்
நாளை திட்டமிட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
அரச வைத்தியர்களினால் நாளை நடத்த திட்டமிட்டள்ள வேலை நிறுத்தப் போராட்டம் நிச்சயமாக நடக்குமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நாளை காலை முதல் இந்த போராட்டம் திட்டமிட்டப்படி நடக்குமென அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் எட்கா உடன்படிக்கை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும் சிறுவர் வைத்தியசாலைகள் , அவசர சிகிச்சைப் பிரிவும் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடக்காது என அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
N5




