செய்திகள்

விசேட வீட்டுக்கடன் வழங்கும்நிகழ்வு இன்று கிளிநொச்சியில்

விசேட வீட்டுக்கடன் வழங்கும்நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது, இன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் ஆரம்பமான நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 300 பயனாளிகளிற்கு வீட்டுக்கடன் காசோலைகள் இன்று அமைச்சரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிட தக்கதாகும். இந்நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அ.அதிபர் குறிப்பிடுயைில்,

வீடமைப்பு திட்டம் என்பது பிரேமதாச அவர்களின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும்,  தற்போது அவரின் மகனிற்கு பொருத்தமான அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்று அமைச்சருடன் உரையாடியபோது பொருத்தமான காணியை பெற்ற தரும்படியாக அமைச்சர் தன்னிடம் கேட்டதாகவும். குறித்த காணியில் மாதிரி கிராமம் ஒன்றினை அமைப்பதாக தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதே வேளை ராஜாங்க அமைச்சரும் கிளிநொச்சி மாவட்டத்ில் அ்கறை செலுத்தி செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் விஜயகலா குறிப்பிடுகையில்,
தற்புாதுள்ள நல்லாட்சி அரசாங்கம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு வருகை தருமாறு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் இன்று சமூகமளித்திருக்கவில்லைஎன தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலன் சார்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டிருந்தார். 9db77f8c-b2c6-45c6-a2c6-a5a792bb8a04
உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பீடுகையில்,
சிறந்த பௌத்தர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், பிரதமரும் பல்வேறு மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், சில சக்திகள் அதை சிதைக்க முற்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், அதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லைஎனவும் தெரிவித்தார். இன்று அரசாங்க அதிபருடன் தேலா 50 ஏக்கர் அளவில் இரு காணிகளை தருமாறு தாம் கோரியதாகவும், அதன் மூலம் வீடுகளை அமைத்து மக்களிற்கு கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தா்ர.
நடைபெற்ற யுத்தத்தின்போது நீங்களும் (பொதுமக்கள்), நான் மற்றும் இங்குள்ள அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்தார். எனினும் அவை அனைத்தையும் விட்டு அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தெரிவிததார். இத்திட்டத்தின் கீழ் வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களிற்கும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தஉள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.11e12837-6728-48cc-a4e1-3b2a9e828da7
n10