செய்திகள்
ஐ.எஸ் அச்சத்தால் கட்டுநாயக்கவில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆசிய நாடுகளுக்குள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இலங்கையில் பாதுகாப்பு பிரிவினர் அது தொடர்பாக அவதனத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு புலனாய்வு பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை நாட்டில் முக்கிய இடங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
R-06




