செய்திகள்

இலங்கையில் ஹெலிக்கொப்டர் அம்புலன்ஸ் சேவை விரைவில்

வெளிநாடுகளை போன்று இலங்கையிலும் ஹெலிகொப்டர்  அம்புலன்ஸ் சேவையை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில்  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளை போன்று இலங்கையிலும் ஹெலிகொப்டர் அம்புலன்ஸ் சேவையொன்றை ஆரம்பிக்க எதிர்ப்பார்துள்ளோம். இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி நடவடிக்கையெடுக்கவுள்ளேன். வெளிநாடுகளில் இந்த சேவைகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகின்றன. நாமும் அதேபோன்று செய்ய வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
R-06