செய்திகள்

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வேண்டாமாம் : நிழல் அமைச்சரவையில் குழப்பம்

நிழல் அமைச்சரவையை கலைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு அமைச்சுகள் தொடர்பாக கண்கானிக்கும் வகையில் விசேட குழுவொன்றை
அமைக்குமாறே மஹிந்த ஒன்றிணைந்த எதிரணியிருக்கு கோரிக்கை விடுத்திருந்த
நிலையில் அவ்வாறு குழுவை அமைப்பதை விடுத்து நிழல் அமைச்சரவையை
அமைத்துள்ளமை தொடர்பாக மஹிந்த அதிருப்தி வெளியிட்டு தனது பெயரை நிழல்
பிரதமர் பதவியிலிருந்தும் மற்றும் மற்றைய அமைச்சுப் பதவிகளிலிருந்தும்
நீக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இதேவேளை மேலும் சில எம்.பிக்களும் தம்மை நிழல் அமைச்சு பதவிகளிலிருந்து
நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

n10