செய்திகள்

மைத்திரி விகாரைக்கு வராத கோபத்தில் நினைவு படிகத்தை தகர்த்த  மங்களாராம விகாராதிபதி

மட்டக்களப்பு மங்களாராம விகாரையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டிடமொன்றை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவில்லையென தெரிவித்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் பெயர் பொதிக்கப்பட்ட நினைவுப் படிகத்தை அந்த விகாரையின் விகாராதிபதி உடைத்தெறிந்துள்ளார்.
குறித்த விகாரையில் புதிதாக மாளிகையொன்று அமைக்கப்பட்டிருந்ததுடன் அதனை ஜனாதிபதியின் நேற்றைய மட்டக்களப்பு விஜயத்தின் போது திறந்து வைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் ஆனால் ஜனாதிபதி அதனை திறந்து வைக்க வரவில்லையென்ற கோபத்திலேயே அந்த விகாரையின் விகாராதிபதி இவ்வாறு நடந்துக்கொண்டுள்ளார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுப்படிகத்தின் சிறு துண்டேனும் இருக்கக் கூடாது என தெரிவித்து அவர் அதனை உடைத்து எறிந்துள்ளார்.
n10