செய்திகள்

கைதுகள் மூலம் என்னைப் பலவீனப்படுத்த முடியாது: முன்னாள் ஜனாதிபதி மகிந்த

கைதுகளின் மூலம் தம்மை பலவீனப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும், புதல்வருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை குறித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது பிள்ளைகளை கைது செய்து அதன் ஊடாக தமது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த எவரேனும் முயற்சித்தால் அதற்கு இடமில்லை என அ வர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிறையில் போட்டாலும் நாட்டு மக்களுக்காக தாம் அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார். நாமல் கைது தொடர்பில் முகநூலில் இட்ட பதிவில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
R-06