செய்திகள்
இறுதிக் கட்ட யுத்தத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு ஆதாரம் இல்லை
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதனை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போத 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சில தரப்பினர் கூறுகின்ற போதும் அவ்வாறு கொல்லப்படவில்லையென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. இராணுவத்தினர் பொது மக்களை பாதுகாப்பாக மீட்கும் கொள்கையிலேயே செயற்பட்டனர்.
அவர்கள் அவ்வாறு பொது மக்களை கொல்லவில்லை. அதற்கான ஆதரங்களும் எங்கும் கிடையாது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10




