செய்திகள்

இறுதி பிரதமர் பேச்சை நகைச்சுவையுடன் பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திய கமரூன்

பிரித்தானிய மகாராணியிடம் முறைப்படி இன்று புதன்கிழமை தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக நடைபெற்ற பிரித்தானிய பாராளுமன்ற அமர்வில் டேவிட் கமரூன் மிகவும் நகைச்சுவையுடன் பேசி அனைவரையயும் சிரிப்பில் ஆழ்த்தினார். ஆனால் அவரது அந்த நகைச்சுவையான பேசஹி அறிவார்ந்ததாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருந்தது.

இந்த அமர்வை தனது பிள்ளைகளுடன் பாராளுமன்ற பொதுமக்கள் கலரியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தனது மனைவி சமந்தாவுக்கு நன்றிகளை டெஹ்ரிவித்த கமரூன் இந்த அமர்வின் பின்னர் மகாராணியை பார்ப்பதை தவிர தனது நாட் குறிப்பேட்டில் எந்த நிகழ்ச்சி நின்றாலும் இல்லை என்றும் அது வெறுமையாகவே இருப்பதாகவும் கூறினார்.

 

எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தந்து உரையில் பல விடயங்களில் கமரூனுடன் தான் உடன்படாதபோதிலும் அவர் சில சாதனைகளை செய்துள்ளதாக பாராட்டினார். குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளும் சட்ட மூலத்தை அவர் நிறைவேற்றியமையை குறிப்பிட்டார். இதற்கு பதில் கூறிய கமரூன் , தனது பதவிக் காலத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றியமையை மறக்கமுடியாத ஒரு என்று குறிப்பிட்டதுடன் இதன்மூலம் ஓரினச் சேர்க்கையாளர்கள் தாம் விரும்புவர்களுடன் வாழ முடிந்துள்ளது என்று கூறினார்.

கமரூன் பேசி முடிந்ததும் கன்சர்வேட்டிவ் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்த்தனர். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்த்தனர்.

இன்று மாலை 5 மணிக்கு அவர் மகாராணியை சந்தித்து ராஜினாமா செய்வார்.

363AEA9400000578-3687933-image-a-46_1468411133650 363AF59400000578-3687933-image-a-20_1468409141293 363AFB6C00000578-3687933-image-a-51_1468411648505 363B1C7800000578-3687933-image-a-53_1468411785590 363B263B00000578-0-image-a-45_1468411122060103199081_LONDON_ENGLAND_12TH_JULY_2016_David_Cameron_and_his_family_saying_thier_goodbyes_as_they_l-xlarge_trans++eqwG1mMdY8c_ukC_8VAhqsi_gTpL6CE4V2utwsGGecgDavid_Cameron_accompanied_by_his_wife_Samantha_and_their_children-xlarge_trans++iCy4Sa7WfgzW16m9C7RHLq9uK94BgqGC6laMOHY3LT4unnamed-large_trans++nXAGUbMUzAspFDYJhbQykgUHxNbRKZyKm-ipwkbSVH8