செய்திகள்

மாகாணத்தின் மூலமாக நிதி ஒதுக்க்கீடுகள் அமுல்படுத்துவதற்கு முழு அதிகாரமும் வழங்கப்படவேண்டும்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால், இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்து, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை தரிசனம்  செய்ததுடன், கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தார்.

இந்த சந்திப்புக் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்;

கிழக்கு  மாகாணத்தினுடைய பிரச்சனைகள் சம்பந்தமாகவும் ,யுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்றுவரும் செயட்திட்டங்கள் சம்பந்தமாகவும் இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாகவும்  நிஷா பிஸ்வாலிடம்  விரிவாக எடுத்துரைத்திருப்பதுடன் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சடடத்தில் உள்ள பொலிஸ்,காணி அதிகாரங்கள் உட்பட நிதி ஒதுக்க்கீடுகள் என்பனவற்றை எவ்வாறு அமுல்படுத்த வேண்டும்,அவை உடனடியாக அமுல்படுத்த வேண்டிய தேவைகள் என்பன தொடர்பில் நாங்கள் தெளிவாக அவரிடம் எடுத்து கூறியுள்ளோம்.

மேலும் அரசியலமைப்பு சீர்திருத்தம் இழுத்தடிக்கப்படாமல் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது என்பதையும்  அது  எங்களுடைய அதிகாரத்துக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும் என்பதுடன் . அதனூடாக மாகாணத்தின் மூலமாக நிதி ஒதுக்க்கீடுகள் அமுல்படுத்துவதற்கு முழு அதிகாரமும் வழங்கப்படவேண்டும் என்பதையும் அவரிடம் நாங்கள் தெளிவாக  எடுத்துக்கூறியுள்ளோம் .

n10