செய்திகள்

பிரான்சில் தீவிரவாத தாக்குதல் பொதுமக்கள் கூட்டத்தில் வாகனத்தை செலுத்தி படுகொலை-84 பேர் பலி

பிரான்ஸ் நாட்டின் நைஸ் மாகாணத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் நேற்று வியாழக்கிழமை இரவு கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது நைஸ் மாகாணத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென, ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் மீது மோதிச் சென்றது. சாலையோரமாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அந்த வாகனம் பொதுமக்களை இலக்கு வைத்தது முட்டி மோதி, அவர்களை உழுவது போல மிதித்து சென்றது. இதில் ஏராளமான மக்கள் சிக்கி நசுங்கினர்.

இந்த தாக்குதலில், சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கனரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

3 2 1