செய்திகள்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஜே.வி.பி குரல் கொடுக்கப் போகிறதாம்
தமிழ் மக்களுக்களுடைய பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கப் போவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவே இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்.வணிகர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக காணிப்பிரச்சனை, மீள்குடியேற்ற பிரச்சினை உள்ளிட்ட காணமல் போனோர் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பிலும் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் தாம் அறிந்து கொண்டதாக தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் காலங்களில் இந்த பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு சாதகமாக கொண்டுவரப்படுகின்ற நல்ல தீர்மானங்களுக்கு அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய திசைகளை நோக்கியதான செயற்பாடுகளுக்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்க தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
n10




