துருக்கியில் இராணுவப்புரட்சி
துருக்கியில் இராணுவம் சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கி ஜனாதிபதி இதனை உறுதிசெய்துள்ளதுடன் இது தேசத்துரோகம் என வர்ணித்துள்ளார்.
தலைநகர் அன்காராவில் இடம்பெற்ற மோதலில் 50ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் ஹெலிக்கொப்டரை பிரதமர் சுட்டு வீழ்த்துவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும், ஏற்கனவெ ஓரு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியின் முக்கிய நகரங்களில் துப்பாக்கிசத்தங்களை கேட்க முடிகின்ற அதேவேளை நாட்டின் இராணுவதளபதியின் நிலை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
நாட்டின் முக்கிய விமானநிலையங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, நகரங்களில் பரவலாக இராணுவத்தினரின் நடமாட்டத்தை அவதானிக்க முடிகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




