கறுப்பு ஜூலை நினைவு தினக் கூட்டம் லண்டனில்
பிரித்தானிய தமிழர் பேரவையினரால் எதிர்வரும் 25 ம் திகதி ஜூலை மாதம் அன்று லண்டனில் 33ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை நினைவு தினக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பில் எதுவித காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக பல தவறுகளை மேற்கொண்டு வருகின்றது. முக்கியமாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1956 ம் , 1958 ம் ,1977 ம் , மற்றும் 1983 ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படட இன அழிப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பாராமுகமே 2009 ம் ஆண்டின் மிகப்பெரிய இன அழிப்புக்கு தூண்டு கோலாக அமைந்திருந்தது. தமிழருக்கான சரியான பாதுகாப்பு பொறிமுறைகள், அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் சரியான அணுகுமுறைகளை கையாண்டு இருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களை தவிர்த்து இருக்கலாம்.
எனினும் சர்வதேச சமூகம் இன்றுவரை இலங்கை தொடர்பிலும் அங்கு நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்பிலும் தனது அணுகு முறை தொடர்பில் தொடர்ச்சியாக தவறு இழைக்கின்றது. இது தொடர்பான கருப்பொருளை வலியுறித்தி இந்த நினைவு தினக்கூட்டம் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
n10




