Happy Birthday Suriya
தமிழ் சினிமாவில் எப்போதும் ரசிகர்களுக்கு என்று விருப்பமான நடிகர்கள் இருப்பார்கள். அவர்கள் பெருபாலும் இரண்டு கூட்டணிகளாக பிரிந்து சண்டைப்போட்டு கொண்டே இருப்பார்கள், இவர்கள் சண்டையில் அவர்கள் உயரம் வளர்ந்து கொண்டே இருக்கும்.
அந்த வரிசையில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று கூறலாம், ஆனால், இவர்களை போல் இல்லாமல் தனக்கென்று ஒரு கோடு போட்டு அதில் சிறப்பாக நடந்தவர் தான் சூர்யா.
ரசிகர்களிடம் மற்ற நடிகர் ரசிகர்களுடன் சண்டைப்போட வேண்டாம், நாங்கள் அனைவரும் நண்பர்களே என வெளிப்படையாக கூறிய ஒரு கலைஞன்.
நடிகர் என்றால் நடித்தோமா, பணத்தை சேர்த்தோமா என்று செல்லும் நிலையில் தன் அகரம் நிறுவனத்தில் கீழ் பல ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று வருகிறார்.
மாஸ் என்றால் ரஜினி, கிளாஸ் என்றால் கமல் இப்படி இரண்டாக பிரிந்து இருக்க, இவர்கள் இருவரையும் இணைத்தது தான் சூர்யா, சிங்கம், ஆறு என ஒரு பக்கம் மாஸ் காட்டினாலும் ஆய்த எழுத்து, வாரணம் ஆயிரம் என மறுப்பக்கம் கிளாஸ் படங்களிலும் நடித்து அசத்துபவர்.
கடந்த சில வருடங்களாக அஞ்சான், மாஸ் என இவர் திரைப்பயணம் இருள் நிறைய, எத்தனை நாட்கள் இருளே இருக்கும், சூரியன் எப்படியும் அதிகாலை உதித்தே தீரும் என்பது போல் 24 படத்தின் மூலம் மீண்டு(ம்) வந்தார். இவர் இன்று போல் என்றும் வெற்றியுடன் வலம் வர வாழ்த்துக்கள். Happy Birthday Suriya
N5




