டபுள் சந்தோஷத்தில் கலைப்புலி தாணு
சமீபகாலங்களில் எந்தவொரு தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை ‘கலைப்புலி’ எஸ்.தாணுவுக்குக் கிடைத்திருக்கிறது. என்ன பெருமை? அவரது தயாரிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல்-14-ஆம் தேதி அன்று விஜய் நடித்த தெறி படம் வெளியானது. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் முதலானோர் நடித்த இப்படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. எப்பேற்பட்ட வெற்றிப்படமாக இருந்தாலும் ஒரு வாரம்… அதிகபட்சமாக இரண்டு வாரங்கள்தான் தியேட்டரில் இருக்கும். தெறி படமோ சென்னையில் இரண்டொரு தியேட்டர்களில் தொடர்ந்து 100 நாட்கள் ஓடியிருக்கிறது! நேற்று தான் தெறி படத்தின் 100 ஆவது நாள்.
‘தெறி’ படத்தின் 100 ஆவது நாளான நேற்றுதான் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் பிரம்மாண்ட தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள கபாலி படம் வெளியாகி உள்ளது. தெறி படத்தை அடுத்து மீண்டும் கலைப்புலி தாணுவுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். அனேகமாக கபாலி படத்தின் 100 ஆவது நாள் அன்று விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு தாணு பூஜை போட்டாலும் ஆச்சர்யமில்லை.
N5




