5 வருடங்களுக்கு அரசாங்கத்தை அசைக்க முடியாது : ஜனாதிபதி
அடுத்த 5 வருடங்களுக்கு அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது எனவும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்கைளயும் அவர்களால் நிறுத்த முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மொரஹாதென்ன களுகங்கை நீர்த்தேக்கத்திற்கான புனித பொருட்களை பிரதிஸ்டை செய்யும் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் எனக்கு அவர்களின் பிரச்சினைகள் தெரியும் அவர்களுக்காக இந்த நீர்த்தேக்கத்தை கொண்டுவர வேண்டுமென முன்னின்ற போதும் அப்போது மகிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. இன்று மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நான் இப்போ இதனை நிறைவேற்றவுள்ளேன. எமது அபிவிருத்திகள் 5 வருடங்களுக்கு தொடரும் யாரும் அதனை தடுத்து நிறுத்த முடியாது. என அவர் தெரிவித்துள்ளார்.
R-06




