முள்ளந்தண்டு முறிக்கப்பட்டோர்கள் – இவர்கள் மறுக்கப்பட்டவர்களா ? மறக்கப்பட்டவர்களா ? (ஆவணப்படம் )
போரும் , இயற்கை அனர்த்தமும் தாண்டாமாடிய பூமியில் அதன் வடுக்களை உடலில் தாங்கி வாழும் ஒரு சமூகமான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாட்காழிகளில் முடக்கப்பட்டவர்கள் பற்றிய ஆவணம் ஒன்றை இங்கு இணைத்துள்ளோம் . போர் அங்கங்களை தின்றுவிட உடலின் இயங்கும் மற்றும் இயங்கா பாகங்களை இழுத்து கொண்டு வாழத்துடிக்கும் இளைஞ்ர்கள் சமூகத்தை நீங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் நெடுகிலும் காணலாம்.
அவர்களின் மனவைராக்கியததையும் , மன ஓலத்தையும் படம்போட்டு காட்டுகின்றது இந்த ஆவணப்படம்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=jVEoG28oMi0″ width=”500″ height=”300″]
இவர்களில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் தனித்துவமானவரகள். அவர்கள் தம்மை இணைத்து உயிரிழை என்னும் அமைப்பை உருவாக்கி தம்து வாழ்வை வழப்படுத்த துடிக்கின்றார்கள். அத்தோடு மட்டும் நிற்காமல் ஏனைய மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து முன்பு ஒருபொழுதும் நடந்திராத வண்ணம் ஓர் மாபெரும் தமிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியை வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பாடு செய்துள்ளார்கள். மாற்றுத் திறனாள்களின் தலைமையில் அவர்களுக்கிடையிலான போட்டிகள்.
இப்போட்டியினை நடாத்துவதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் இனம் காணப்படுவார்கள். அவர்களது திறமைகள் இனம் காணப்படும் அவர்களது தேவைகள் இனம் காணப்படும். மாற்றுத் திறனாளிகள் தொடர்பான ஒரு தகவல் திரட்டு உருவாக்கப்படும் அதன் மூலம் கிடைக்கும் உதவிகள் அனைத்தும் மிகவும் தேவையில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடியதாக இருக்கும்.
இதற்காக திரட்டும் பணம் இந்த விளையாட்டு போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் அத்தோடு மாற்றுத் திறனாளிகளை நிருவாக ரீதியில் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும். மீதமான பணம் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு பின்வரும் வரிசையில் பயன்படுத்தப்படும்.
சிறுதுளிதிட்டம் : முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாதம் ரூப 10,000 கொடுப்பனவு திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்.
நம்பிக்கை திட்டம் : ஒன்றுக்கு மேற்பட்ட அங்கப்பதிப்புக்கு உட்பட்டவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ரூ 5000.00.
பராமரிப்பு திட்டம் : அங்கம் பாதிக்கப்பட்ட சிறார்கள் பராமரிப்பும் , பெற்றோரை இழந்த சிறார்கள் பராமரிப்புக்குமாக பயன்படுத்தப்படும்.
பல்கலைக்கழ்கத்திற்கு தேர்வாகி கல்வி கற்கும் தமிழ் மாற்றுத் திறனாளிகளின் சாதனையை ஊக்குவிக்க அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும்
வாழ்வில் முன்னெறத்துடிக்கும் மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பது உங்கள் அன்பும் ஆதரவுமே!
இவர்களுக்குதவ முன்வரும் நல்லுள்ளங்களுக்காக பின்வரும் தகவல்களை பதிகின்றோம்.
உயிரிழை – முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு
கணக்கு இலக்கம் : 79147248
Uyirilai Spinal cord Injury association,
Bank of Ceylon
Vavuniya
மேலதிக தகவல்களுக்கு http://www.tamilparasports.com/
தொடர்புகளுக்கு : admin@tamilparasports.com




