செய்திகள்

திட்டமிட்டப்படி கண்டியிலிருந்து பேரணி ஆரம்பமாகும் : ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவிப்பு

திட்டமிட்டப்படி இன்று தமது ஆர்ப்பாட்ட பேரணி  ஆரம்பமாகுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. குறித்த பேரணியை  கண்டி நகரத்திற்குற்பட்ட பகுதியிலிருந்து ஆரம்பிப்பதற்கும் மற்றும் மாவனல்லை நகரத்தினூடாக நடத்துவதற்கும் நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திட்டமிட்டப்படி தமது பேரணி நடக்குமெனவும் அது நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து கண்டி நகருக்கு வெளியில் இருந்து ஆரம்பிக்கப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தினால் கண்டி நகர எல்லைக்குள் இருந்தே பேரணி ஆரம்பிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி தமது பேரணிக்கு எந்த வகையிலும் தடை விதிக்கப்படவில்லையெனவும் இதனால் அதனை தாம் நடத்துவோம். என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தடையானது தனக்கும் , கெகலிய ரம்புக்வெல்லவுக்கும் , திலும் அமுனுகமவுக்குமே விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்றையவர்கள் தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டு கெட்டம்பே விகாரைக்கு முன்னால் வருமாறு அவர் அவர்களின் ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சு-06