அஜித்திற்காக தன் படத்தையே தள்ளி வைத்த விக்ரம் பிரபு
அஜித் என்றுமே பிரபு குடும்பத்துடன் ஒரு நல்ல நட்பில் இருப்பவர். இவருடைய மகன் விக்ரம் பிரவும் அதே நட்பில் தான் தொடர்கிறார்.
இவர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக முடிசூடா மன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே தன் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்து அஜித் படத்தை தயாரிக்கவுள்ளது, அந்த படத்தை தயாரிக்க ஆரம்பித்தால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை அவர்கள் பார்த்துக்கொள்வது கடினம் என்பதை விக்ரம் பிரபு உணர்ந்துள்ளார்.
உடனே தற்போது முடிசூடா மன்னன் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு அந்த படத்தை முடித்துக்கொடுத்த பிறகே, தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாராம்.
N5




