செய்திகள்

அம்பியூலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை

மகிந்த அணியினரால் நேற்றைய பாதயாத்திரையின் போது அம்பியூலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக பேரதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி அங்கு ஊடகங்களினால் எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆராயப்பட்டு அதிலுள்ள சந்தேகக நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
பாதயாத்திரைக்கு மத்தியில் வேகமாக குறித்த அம்பியூலன்ஸ் பயணிக்க முற்பட்ட போதே அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தில் நோயாளி இல்லையெனவும் , நோயாளி இல்லாது எதற்கு அவசரமாக செல்ல வேண்டுமென தெரிவித்து பாதயாத்திரையில் கலந்துக்கொண்டோர் சாரதியை தாக்க முயற்சித்ததுடன் அந்த வாகனத்தை செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எவ்வாறாயினும் வேறு இடத்திலுள்ள நோயாளி ஒருவரை ஏற்றி வருவதற்காகவே அந்த அம்பியூலன்ஸ் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10