கூட்டு எதிர்க்கட்சி நீதிமன்ற சட்டதிட்டங்களை மீறியுள்ளது-லக்ஸ்மன் கிரியெல்ல
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை குழுவானது நீதிமன்ற சட்டங்களை மீறியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த பாதயாத்திரையை கண்டியில் ஆரம்பிக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், பாதயாத்திரையானது பேராதெனிய பாலத்துக்கு அப்பால் ஆரம்பிக்கப்படாமல் கண்டி நகரின் எல்லையிலேயே ஆரம்பித்ததாகவும் இதன் மூலம் நீதிமன்றின் உத்தரவை இவர்கள் மீறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேராதெனிய கெட்டம்பே விகாரையும் கண்டி நகரின் எல்லைக்கு உட்பட்டதென்றும் தெரிவித்துள்ளார்.
N5




