செய்திகள்

யுத்தத்தின் வடுக்களை சுமந்து மன்னாரில் அல்லல் படும் ஓர் தமிழ் கிராமம்.

 
 எஸ்.வினோத்

கடந்த 30 வருடங்கள் இடம் பெற்ற யுத்தத்தின் பின் மீண்டும் ஓர் வாழ்வை ஆரம்பிக்கலாம் என்ற கனவுடன் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் இன்று ஏமாற்றத்துடன் வாழ்வை கழித்து வருகின்றனர்.

இலங்கையின் வடக்கிலே உரிமையை வெண்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆயுத வழிப்போராட்டம் இன்று மௌனிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று இனவாதம்,மதவாதம் தூண்டப்பட்டுள்ளது.தமிழர்களுக்கு இடையிலே ஓர் மத ரீதியிலான வண்முறை தூண்டப்பட்டுள்ளது.

ஆனால் யுத்தம் முடிந்து இன்று 7 வருடங்களை கடந்துள்ள போதும் வன்னி பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் நிலமை மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

அந்த வகையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராம மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தமது உள்ளத்தில் உள்ள பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் உண்மைக்கு முதலிடம் கிடைக்கவில்லை என கவலையுடன் தெரிவிக்கின்றனர் சன்னார் கிராம மக்கள்.

-சன்னார் கிராம மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மீண்டும் ஒரு முறை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியில் கலந்து கொண்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் அன்று முதல் இன்று வரை எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

-கிடைக்கின்ற உதவிகளை வைத்து தமது குடும்பத்தை வழி நடத்தி வருகின்ற சன்னார் கிராம மக்களின் வாழ்வில் தற்போது ஓர் மௌன ரீதியிலான இன அழிப்பு இடம் பெற்று வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் அக்கிராம மக்கள்.

-நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினால் இலட்சக்கணக்கான உறவுகளை இழந்த தமிழ் இனம் இன்று யுத்தம் முடிவடைந்த நிலையில் தாயின் வயிற்றில் தனது சிசுக்களை அழிக்கின்ற ஓர் நிகழ்வு அறங்கேற்றப்பட்டுள்ளது அக்கிராமத்தில்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் பயிற்சி முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயுதப்பயிற்சியின் காரணமாக ஏற்படுகின்ற பாரிய அதிர்வுகளினால் சன்னார் கிராமத்தில் பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைப்பு ஏற்படுவதாக அக்கிராம மக்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

சன்னார் கிராமத்தை அண்டிய பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தின் பாரிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ முகாமிலேயே இராணுவ பயற்சி முகாமும் காணப்படுகின்றது.

இராணுவ பயிற்சி முகாமில் தொடர்ச்சியாக இராணுவத்திற்கு ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.குறித்த பயிற்சி முகாமில் இருந்த சுமார் 500 மீற்றர் தொலையில் மக்களின் குடியிறுப்பு காணப்படுகின்றது.

இராணுவ பயிற்சி முகாமில் மோட்டார் செல் பயிற்சி,கண்ணிவெடி செயலிழப்பு,கைக்கண்டு பயிற்சி மற்றும் துப்பாக்கி சூட்டு பயிற்சி போன்றவை இடம் பெற்று வருகின்றது.

குறித்த பாரிய பயிற்சிகளினால் சன்னார் கிராமத்தில் பலத்த அதிர்வுகள் ஏற்படுகின்றது.

-இதன் காரணத்தினால் குறித்த கிராமத்தில் உள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது.

சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கடந்த 2 மாதங்களுக்குள் இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு காரணம் குறித்த இராணுவ பயிற்சி முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் அயுதப்பயிற்சியினால் ஏற்பட்டுள்ள அதிர்வு மற்றும் வெளி வருகின்ற புகையினை சுவாசிக்கின்றமையினாலேயே ஏற்பட்டுள்ளதாக அரிய முடிகின்றது.

மேலும் இரவு நேரங்களில் இராணுவத்தினர் சன்னார் கிராமத்தில் மக்களின் காணிகளில் இரகசிய நடமாட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர்.சில நேரங்களில் இரவுகளில் வீட்டு வளாகத்தில் இராணுவத்தை கண்டால் ஆண்கள் என்ன என்று கேட்டால் சிங்களத்தில் ஏதே கூறி விட்டு செல்கின்றனர்.கேட்டால் இராணுவ பயிற்சி இடம் பெறுகின்றது என கூறுகின்றார்கள்.

-இது தான நல்லாட்சி என இக்கிராம மக்கள் என்னுகின்றனர்.

-மேலும் சன்னார் கிராமத்திற்கு உரித்தான குளம் இராணுவ பயிற்சி முகாம் அமைந்துள்ள பகுதியிலே காணப்படுகின்றது.

குறித்த குளத்தில் சன்னார் கிராமத்தை சேர்ந்த சுமார் 172 குடும்பங்கள் நண்ணீர் மீன் பிடியில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது இராணுவத்தினர் சன்னார் குளத்திற்கு செல்லும் உரிய பாதையினால் செல்ல விடாது மாற்றுப்பாதையினால் செல்ல அனுமதிக்கின்றனர்.

இதனால் மீன் பிடிக்கச் செல்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த மாற்றுப்பாதையில் யானையின் நடமாட்டமும் அதிகரித்தள்ளது.

சுமார் 500 மீற்றரில் உள்ள குளத்திற்கு 3.5 கிலோ மீற்றர் காட்டுப்பாதையூடாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை,மார்களி,தை,மாசி,பங்குனி ஆகிய 5 மாதங்களிலும் மீன் பிடிக்க செல்ல முடியாது.

காரணம் குறித்த காட்டுப்பாதையூடாக வெள்ள நீர் செல்லும்.இதனால் வருடத்தில் 5 மாதங்கள் தொடர்ச்சியாக மீன் பிடிக்க செல்ல முடியாத நிலையில் தவிக்கின்றனர்.

குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்றால் அச்சத்திலேயே குளத்தினுள் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டு பயிற்சி குளத்தை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.

இதனால் குளத்தின் கரையை திரும்பும் வரை உயிரை கையில் பிடித்த நிலையிலே செல்ல வேண்டியுள்ளது.

குறித்த பிரச்சினை குறித்து மீனவர்கள் இராணுவத்திடம் தெரிவித்த போது துப்பாக்கி சூடுகளுக்கு மத்தியில் எவ்வாறு மன்னாரில் இருந்து மாத்தளன் வரை சென்றீர்களோ அவ்வாறு குளத்திற்கு சென்று வாருங்கள் என தெரிவிக்கின்றனர்.

எனவே கடந்த மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் தமிழ் மக்கள் பட்ட துயரங்கள் இன்று ஆற்றப்பட வேண்டும்.மஹிந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.மைத்திரி அரசை ஆட்சி பீடம் ஏற்ற வேண்டும் என வடக்கு தமிழ் மக்கள் ஒரே பாதையில் முடிவெடுத்தனர்.அதன் பலனாக மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை இழக்க மைத்திரி பால சிறிசேன ஆட்சி பீடம் ஏறினார்.

ஆனால் மஹிந்த அணியில் இருந்த பலர் மைத்திரி அரசுடன் ஒட்டிக்கொண்டனர்.மேலும் சிலர் நிபந்தனைகளுடன் ஒட்டிக்கொண்டனர்.இன்று அவர்கள் அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர்.

ஆனால் வாக்களித்த மக்கள் மஹிந்த ஆட்சியில் என்ன துன்பங்களை அனுபவித்தார்களோ அதே துன்பத்தை தற்போதைய அரசிடம் இருந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர தமிழ் மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.தமிழ் அரசியல் தலைமைத்துவம் தொடர்ந்தும் மௌனம் காத்துக்கொண்டிருப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

DSC_0024 DSC_0047 DSC_0064 DSC_0077 sanar (1) sanar (2) sanar (3) sanar (4)

N5