பாதயாத்திரை கொழும்புக்குள் நுழைவதை தடுக்க அரசாங்கம் கடும் பிரயத்தனத்தில்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரையை கொழும்புக்குள் நுழையவிடாது தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரை பயன்படுத்தி நீதிமன்றத்தினூடாக அதற்கான தடையுத்தரவை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளானர். இதன்படி பேலியகொடை பொலிஸார் நேற்று முன்தினம் நீதிமன்றத்தை நாடி குறித்த யாத்திரை கொழும்புக்குள் நுளைவதற்கு தடைவிதிக்குமாறு கோரியுள்ள போதும் நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. எவ்வாறாயினும் வேறு வழிகளில் அதற்கு தடையேற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அந்த யாத்திரை எப்படியாவது கொழும்புக்குள் நுளைந்தாலும் அதற்கு எங்கும் கூட்டத்தை நடத்தவிடாது செய்யும் முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி கூட்டத்திற்காக முற்பணம் செலுத்தி ஒதுக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபைக்குற்பட்ட பிரதேசத்திலுள்ள ஹைட்பார்க் மைதானத்தில் தீடிரென திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனால் அந்த மைதானத்தில் கூட்டத்தை நடத்த முடியாது போகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.




