செய்திகள்

பிரபல தொலைக்காட்சிகள் மற்றும் கபாலி சென்ஸார் வரை வெளுத்து வாங்கிய கரு. பழனியப்பன்

பார்த்திபன் கனவு, மந்திர புன்னகை ஆகிய படங்களை இயக்கியவர் கரு. பழனியப்பன்.

இவர் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இதில் இவர் பேசுகையில் ‘கபாலி, கபாலி என அதைப்பற்றியே பேசுகிறீர்களே, அட்டக்கத்தி படத்திலேயே ரஞ்சித் பல அரசியலை கூறியிருப்பார், ஏன் அந்த படத்தை பற்றி எந்த தொலைக்காட்சியும் கூறவில்லை.

ஏனெனில் உங்களுக்கு அதில் பெரிய விளம்பரம் இல்லை, ரஜினி என்பதால் தானே பேசுகிறீர்கள், இதுமட்டுமின்றி கலையும், அரசியலும் எப்போதோ ஒன்று சேர்ந்துவிட்டது.கபாலி படத்தின் அத்தனை வன்முறை காட்சிகள் இருக்கிறது, ஆனால் அதற்கு யு சான்றிதழ் கிடைத்தது எப்படி?, எல்லாம் அரசியல்’ என வெளுத்து வாங்கிவிட்டார்.

N5