செய்திகள்

இராணுவத்தின் நில அபகரிப்புக்கு எதிராக நந்திக்கடல் பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டம்

இராணுவம் முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்க எடுத்த முயற்சிகளை கண்டித்து நந்திக்கடல் பாலத்தை மறித்து ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறும், நில அபகரிப்பு எதிராகவும் மக்கள் கோசங்களை எழுப்பினர். ‘நல்லாட்சி அரசே எமது காணிகளை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும், பறிக்கப்பட்ட மண்ணும் உரிமையும் எமக்கு வேண்டும், இராணுவமே உனது அடாவடியை நிறுத்து’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி காணி உரிமையாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன், து.ரவிகரன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

image-0-02-01-ad18e95e0f002f0c643afc57fbb58d1d254fcab055b3737ecc98dfe3b2c4748b-V image-0-02-01-c032fb3fac114519c97cbbf056f88bd7a3a556040231064a24929808e8d344ee-V image-0-02-01-1f56de44620b2b52b6193fe012b7d90f396f277862b14d1f9b82adfc5eeedfab-V image-0-02-01-68fbb1e788bce4a7eb7a08dd335b2997112fc66c719a306dddce3a16053a0b9f-V

N5