செய்திகள்

யாழ் பல்கலைக்கழக பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் : ஜனாதிபதி

யாழ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கு சென்று அச்சமின்றி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று யாழ் பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் தற்போது அங்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் அச்சமின்றி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.