அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் நேரில் சென்று சந்திப்பு-
‘தமது விடுதலையை துரிதப்படுத்துமாறு அரசியல் கைதிகள் கூட்டாக கோரிக்கை’
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினறும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமாறு செல்வம் அடைக்கலநாதான் இன்று சனிக்கிழமை(6) மதியம் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
தமது விடுதலையை வழியுறுத்தி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப்பபோவதாக அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையிலே பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார்.
இதன் போது பல வருடங்களாக எவ்வித விசாரனைகளளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை பொது மன்னிப்பு வழங்கி வடுதலை செய்ய வேண்டும்.
அல்லது பிணையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,மறாக தொடர்ச்சியாக எவ்வித விசாரனைகளும் இன்றி சிறையில் அடைக்கும் நிலை ஏற்பட்டால் நாங்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
தமது விடுதலை குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,எனவும் குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து தமது விடுதலை குறித்து வழியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தமது கோரிக்கை அடிங்கிய கடிதம் ஒன்றை தமிழ் தேசியக்கூட்;டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களிடம் வழங்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
N5




