2017 இல் சகல ஆட்டோக்கள், வாடகை கார்களில் மீற்றர் உபகரணங்கள்
2017 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் சகல ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்களில் மீற்றர் உபகரணம் பொருத்தபப்டும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுர்தீன் தெரிவித்துள்ளார்.
ஆட்டோக்களில் பயணம் செய்பவர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதாக செய்துள்ள பெரும் எண்ணிக்கையான புகார்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி பயணி ஒருவர் ஆட்டோக்களில் பயணம் செய்யும் தூரத்துக்கு ஏற்ப பணத்தை கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த மீற்றர் உபகரணங்கள் சர்வதேச தரத்தில் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




