செய்திகள்
மைத்திரி , ரணிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அவர்களின் பாதுகாப்பு பிரிவினரால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொது நிகழ்வுகளில் மக்களுக்கு மத்தியில் பயணிக்கும் போது ஓர் இடத்தில் நிற்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு பிரிவினரால் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினருடனான சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)




