செய்திகள்

பரவிப்பாஞ்சான் காணியை விடுவிக்குமாறு இராணுவத்மிற்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்

இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று (சனிக்கிழமை) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொது மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த புதன்கிழமையன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாத நிலையில் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் அனைத்துக் காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்றைய தினம் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed (9) (1)

N5