செய்திகள்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு எதிரானவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கும் தீர்மானத்திற்கு எதிரான தரப்பினருக்கு தன்னுடன் அது தொடர்பாக கலந்துரையாட முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அலுவலகமானது ஒரு தரப்பை இலக்காக கொண்டு அமைக்கப்படாது. முழு நாட்டிலும் காணாமல் போனவர்கள் தொடர்பாகவே அது ஆராயும். இது இராணுவத்திற்கு எதிரானது அல்லது. இது தொடர்பாக எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் என்னும் கலந்துரையாடலாம். -(3)