செய்திகள்
ஜே.வி.பியின் தலைவர்கள் தொடர்பாக காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)யின் அரம்ப கர்த்தாவான ரோஹன வீஜேவீர , முன்னாள் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க உள்ளிட்ட முன்னாள் முக்கியஸ்தர்கள் தொடர்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜே.வி.பி ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. – (3)




