சந்தானத்திற்கு அடித்த யோகம்
இவரும் சிவகார்த்திகேயனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு குட் பை சொல்லிவிட்டு சினிமாவுக்கு வந்தாலும், இன்று டாப் 5 ல் ஒருவராகிவிட்டார் சிவா. ஆனால் சந்தானத்தின் பொசிஷன் டவுன் டவுன்! உருண்டு புரண்டு போராடி ஒருவழியாக தில்லுக்கு துட்டு என்ற ஹிட்டு கொடுத்துவிட்டார். அப்புறமென்ன? வண்டி டாப் கியர்தான்.
பிரபல தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் சந்தானத்தை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அவர் போட்ட பிள்ளையார் சுழி அப்படியே படு பயங்கரமாக வொர்க் அவுட் ஆகிவிட்டது. லைக்கா உள்ளிட்ட சில பிரபல நிறுவனங்களும் சந்தானத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. முகத்திற்கு நேரே சந்தித்துக் கொண்டாலும், பார்க்காதது போல கிராஸ் ஆகிவிடும் சிவாவும் சந்தானமும் இனி போஸ்டர்களில் முட்டிக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை.




