கடல் பகுதிகளில் கடும் காற்றுவீசும் : மீனவர்களுக்கு எச்சரிக்கை
அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் நாட்டை சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும் கடும் காற்றுடன் கூடிய கால நிலை நிலவக் கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த காலநிலை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடரக் கூடுமெனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறையூடாக திருகோணமலை வரையும் அத்துடன் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையும் கடல் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமெனவும் இது அடிக்கடி 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசலாமெனவும் கடல் கொந்தளிப்பாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தக்காலப்பகுதியில் கடலுக்கு செல்லும் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. -(3)




