செய்திகள்
விச ஊசி குற்றச்சாட்டை மறுக்கிறார் புனர்வாழ்வு ஆணையாளர்
புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விச ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக புனர்வாழ்வு ஆணையாள் மேஜர் ஜேனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏதேனும் தரப்பினர் குற்றஞ்சாட்டினால் மாத்திரம் அது உண்மையாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் முன்வைக்கும் இவ்வாறான குற்றச்சாட்டுகளால் முன்னாள் விடுதலைப்புலிகளே பாதிக்கப்படுவார்கள் எனவும அவர் தெரிவித்துள்ளார். -(3)




