நீயா நானாவில் ரஜினி கலந்து கொண்டாரா ?
ரஜினி என்ற நடிகருக்கு தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் டி.வி யில், ரஜினி சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக ரஜினி ஸ்பெஷல் நீயா நானா ஷோ நடந்தது.
இதில் ரஜினி ரசிகர்கள், ரஜினியை பற்றி உணர்ச்சிபூர்வமாக பல விஷயங்களை பகிர்ந்தார். ஏற்கனவே ரஜினி இந்நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் என்ற செய்தி வெளிவந்தது.
அதை எதிர்பார்த்து பல ரசிகர்கள் இன்று நீயா நானா நிகழ்ச்சி முன் உட்கார, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. ரஜினி ரசிகர்களின் சந்தோஷ பரிமாறலுடனே நிகழ்ச்சியை முடித்து விட்டனர்.
N5




