செய்திகள்

புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதி தலைவர் மாத்தையா றோவின் கையாள் என்கிறது புதிய ஆங்கில நூல்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரதிதலைவர் கோபாலசாமி மாத்தையா இந்தியாவின் உளவு அமைப்பான ‘றோ’ வின் கையாளாக செயற்பட்டவர் என முன்னாள் இந்தியபிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்படுவதற்கு சற்றுமுன்னர் அவரைபேட்டி கண்ட நீனா கோபால் எழுதியுள்ள புதியநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தையாவை ‘ றோ’ தனது கையாளாக வளர்த்தது. எவராலும் ஊருடுவமுடியாத பிரபாகரனின் உள்வட்டத்திற்குள் ஊருடுவதற்கு மாத்தயாவை பயன்படுத்தியது என அவர் ராஜீவ்காந்தியின் படுகொலை என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ரோவிற்கு மிகவும் பயனுள்ளவராக மாறினார். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் இருந்தபடியே அதற்கு பாதிப்பை ஏற்படுத்துபவராக மாறினார்.விடுதலைப்புலிகளின் தலைவரை கொலைசெய்துவிட்டு அந்த அமைப்பின் தலைமையை அவரிற்கு வழங்கப்பட்டிருந்த பணி எனவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

39எனினும் பின்னர் மாத்தையா இந்தியாவின் உளவாளி என்பதை கண்டுபிடித்த விடுதலைப்புலிகள் அவரை படுகொலைசெய்தனர். றோவுக்கும் மாத்தையாவிற்கும் இடையிலான தொடர்பு இந்தியாவின் இராணுவபுலனாய்வு பிரிவினருக்கோ அல்லது ஏனைய புலனாய்வு பிரிவுகளிற்கோ தெரியாத விடயம் எனவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் யாழ்மாவட்ட தளபதி கிட்டு பயணம்செய்துகொண்டிருந்த கப்பல்குறித்து இந்திய புலனாய்வு பிரிவிற்கு தகவல்வழங்கியது மாத்தையா தான் என விடுதலைப்புலிகள் கருதினர்.

இதன் பின்னர் மாத்தையா கைதுசெய்யப்பட்டு இரகசிய முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலைசெய்வதற்கு பிரபாகரன் உத்தரவிட்டதன் காரணமாக இந்தியாவின் ஏனைய அமைப்புகளை போல ரோவும் சீற்றமடைந்திருந்தது. தங்களிற்கு துரோகமிழைக்கப்பட்டுவிட்டதாக கருதியது. இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணத்தில் ரோவிற்கு பங்கிருக்கலாம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் தனது கையாட்களை ஊருவச்செய்ய முடிந்ததனால் ‘றோ’ அளவுக்கதிகமான நம்பிக்கை கொண்டிருந்தது. இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் தலைவர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை பழிவாங்க முயல்வார் என்பதை ‘றோ’ கருத்தில்கொள்ள தவறிவிட்டது.
நாங்கள் சமிக்ஞைகளை சரியாக புரிந்துகொண்டிருந்தால் பிரபாகரன் என்ன நினைக்கின்றார் என்பதை சரியாக புரிந்துகொண்டிருந்தால் ராஜீவ்காந்தி கொல்லப்படுவதை தடுத்திருக்கலாம் என றோவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்

இது எங்களின் தவறு. நாங்கள் மிகப்பெரும் மதிப்பீட்டு தவறை செய்துவிட்டோம். நாங்கள் பிரபாகரனை தவறாக புரிந்துகொண்டோம். அவர் எங்களிற்கு எதிராக இந்தளவிற்கு மாறுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் இதனை எதிர்பார்த்திருக்கவேண்டும் அதனை செய்ய தவறினோம் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

ராஜீவ்காந்திக்கு தனக்கு என்ன நடக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தது. அவர் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பாதுகாப்பேயிருக்கவில்லை. அது அவரிற்கு கூட தெரிந்திருந்தது என புதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.