காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் சர்வதேச தலையீடுகளுக்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளது
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் சர்வதேச தலையீடுகளுக்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளதாகவும் நாட்டின் இறையாண்மைக்கும் இராணுவத்தின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் எனவும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் வட-கிழக்கு பகுதிகளில் போர்க்கால சூழலில் காணாமல் போனவர்களை மட்டும் சுட்டிக்காட்டி நாட்டில் பிரதேச ரீதியான பிளவுக்க்கும் இது வழி வகுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜி .எல். பீரிஸ் பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
n10




