ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பலத்தை கொண்ட தொகுதி அமைப்பாளர்களை அந்தப் பதவியிலிருந்து நீக்குவது கட்சியை பிளவுபடுத்தும் செயற்பாடே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.இதனால் கட்சி இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இவ்வாறு கட்சியின் மக்கள் பலத்தை கொண்டவர்களை முக்கிய பதவிகளிலிருந்து நீக்கி மக்கள் பலமே இல்லாதவர்களை அந்தப் பதவிக்கு நியமித்தமையானது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். -(3)




