சு.கவின் மாநாடு தொடர்பான மகிந்த அணியின் தீர்மானம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் கலந்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தான் அந்தக் மாநாட்டில் கலந்துக்கொள்ளவுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ எங்கும் அறிவிக்கவில்லையனவும் எவ்வாறாயினும் தமது அணியிலுள்ள கட்சி உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து திங்கட் கிழமை தீர்மானத்தைத அறிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். -(3)




